Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் உங்களை குப்கர் என்று அழைக்கவா? தேசவிரோத கூட்டணி என்று அழைக்கவா? - சிவராஜ்சிங்

நான் உங்களை குப்கர் என்று அழைக்கவா? தேசவிரோத கூட்டணி என்று அழைக்கவா? - சிவராஜ்சிங்

By: Karunakaran Fri, 20 Nov 2020 4:24:47 PM

நான் உங்களை குப்கர் என்று அழைக்கவா? தேசவிரோத கூட்டணி என்று அழைக்கவா? - சிவராஜ்சிங்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கத்தோடு குப்கர் என்ற கூட்டணி அமைக்கப்பட்டது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் அமைக்கப்பட்டு இந்த கூட்டணியில் ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிறகட்சிகள் இணைந்துள்ளன.

ஆனால் தேசிய கட்சியான பாஜக இந்த கூட்டணியில் சேரவில்லை. காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த வித கருத்தும் வெளியாகவில்லை. அதேபோல், குப்கர் கூட்டணியில் இணைந்துள்ளோம் எனவும் காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை.

kupkar,anti-national alliance,sivaraj singh,rahul gandhi ,குப்கர், தேசிய எதிர்ப்பு கூட்டணி, சிவராஜ் சிங், ராகுல் காந்தி

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், குப்கர் கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்தியபிரதேச முதல்மந்திரியுமான சிவராஜ்சிங் சௌகான் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து இன்று சிவராஜ்சிங் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் குப்கர் கூட்டணி என்று அமைத்துள்ள ராகுல்காந்தி மற்றும் 8 கட்சிகளிடமும் நான் கேட்கவிரும்புகிறேன்... நான் உங்களை குப்கர் என்று அழைக்கவா? அல்லது தேசவிரோத கூட்டணி என்று அழைக்கவா? அல்லது மக்கள் விரோத கூட்டணி என்று அழைக்கவா? அந்த கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தேசவிரோத கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Tags :
|