Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா? விரைவில் அறிவிப்பு?

மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா? விரைவில் அறிவிப்பு?

By: Nagaraj Wed, 28 Dec 2022 10:25:32 PM

மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா? விரைவில் அறிவிப்பு?

சென்னை: பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக சுகாதாரத்துறை அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக அரையாண்டு தேர்வு முடிந்த பின்னர் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.

school education,students,mask,notification,health department ,பள்ளி கல்வித்துறை, மாணவர்கள், மாஸ்க், அறிவிப்பு, சுகாதாரத்துறை

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமா என சுகாதாரத்துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரையாண்டு விடுமுறைக்குப் பின் ஜன.2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைவில் இது குறித்த அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags :
|