Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? குறித்து சுகாதார துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? குறித்து சுகாதார துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

By: vaithegi Wed, 28 Dec 2022 7:57:33 PM

மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா?  குறித்து சுகாதார துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு

சென்னை: கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு .... சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாள்தோறும் உயரும் பாதிப்பு எண்ணிக்கை அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவிலும் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து இது பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு பணிகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

department of school education,masks,students ,பள்ளிக்கல்வித்துறை ,முகக்கவசம் ,மாணவர்கள்

எனவே இதன் அடிப்படையில் தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவது வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்நிலையில் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்பது பற்றி சுகாதார துறையிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Tags :
|