Advertisement

சைபர் தாக்குதலில் நீங்கள் தப்பிக்க வேண்டுமா?

By: vaithegi Mon, 14 Nov 2022 7:37:06 PM

சைபர் தாக்குதலில் நீங்கள் தப்பிக்க வேண்டுமா?

இந்தியா: சைபர் தாக்குதலிருந்து தப்பிக்க வழி ... தற்போது வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் முறையில் அனைத்து வேலைகளையும் மக்கள் செய்து வருகின்றனர். மறுபுறம் ஆன்லைன் முறையில் முறைகேடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்த நாள்தோறும் புதுப்புது யுக்திகளை கண்டுபிடித்து கொண்டு வருகின்றனர். அதனால் ஆன்லைன் மோசடிகள் குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

cyber,online ,சைபர் ,ஆன்லைன்

மேலும் தற்போது ஒரு லிங்கை கிளிக் செய்தாலே போதும், உங்களின் அனைத்து தகவல்களும் திருடப்பட்டு விடும். இதனால் ஒவ்வொரு ஆன்லைன் பயன்பாடுகளையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும். இது போன்ற ஆன்லைன் மோசடிகளை ஒரேயொரு கிளிக்கில் தடுக்கவும் முடியும். கூகிள் நிறுவனத்தின் Play Protect செயலி தான் இதை செய்கிறது.

பெரும்பாலும் ஆன்லைன் மோசடிகள் செயலிகள் மூலமாகவே நடைபெறுவதால் இதனை தடுக்கும் விதமாக Play Protect செயலி ஒவ்வொரு நாளும் சுமார் 100 பில்லியன் செயலிகளை ஸ்கேன் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதனால் இப்போதே உங்களின் மொபைலில் Play Protect செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என Google நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்து உங்களின் தகவல்களை பாதுகாக்க அதிகாரப்பூர்வமற்ற ஆண்ட்ராய்டு ஸ்டோர்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

Tags :
|