Advertisement

ட்விட்டரில் வெளியான கலக்கல் அப்டேட்

By: vaithegi Fri, 11 Aug 2023 12:35:02 PM

ட்விட்டரில் வெளியான கலக்கல் அப்டேட்

இந்தியா: ட்விட்டர் மூலமாக பயனர்களின் மொபைல் எண் எதுவும் இல்லாமல் செயலி மூலமாகவே வீடியோ கால் பேசும்படியான அப்டேட் வெளியீடு ...டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் – எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டரைக் கடந்தாண்டு வாங்கி பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி கொண்டு வருகிறார்.

அந்த வகையில், பல ஆண்டு காலமாக இருந்து வந்த ட்விட்டரின் லோகோவை மாற்றினார். இதையாடுது இந்த மாற்றம் சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

update,twitter ,அப்டேட்,ட்விட்டர்


மேலும், பிரபலங்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கப்பட்டு வந்த நிலையில் உரிய பணத்தை செலுத்தினால் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக்கை பெறலாம் எனும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் நிறுவனமும் பணத்தை செலுத்தி ப்ளூ டிக்கை பெறும் வசதியை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு போட்டியாக ட்விட்டர் மூலமாகவும் வீடியோ கால் பேசும்படியான அம்சத்தை எலான் மஸ்க் அறிமுகம் செய்து உள்ளார். மேலும், கூடிய விரைவில் பயனர்களுக்கு கூடுதல் அனுபவத்தை தரும் வகையில் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிடயிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|