சித்தராமையா வேட்பாளர்களை மேடையில் அறிவிப்பது சரியல்ல
By: Nagaraj Mon, 19 Dec 2022 6:55:14 PM
கொப்பல்: சித்தராமையா வேட்பாளர்களை மேடையில் அறிவிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் செயல்தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.
கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோலி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்துள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, பொதுக்கூட்ட மேடைகளில்
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிப்பது சரியல்ல. ஏனெனில் பல
பிரபலங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு
அளித்துள்ளனர்.
224 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம்
தெரிவித்துள்ளார்கள். அவர்களும் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்புக்காக
காத்திருக்கின்றனர். இந்த நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும்
வேட்பாளர்களை பகிரங்கமாக அறிவிப்பதால் அங்கு போட்டியிட நினைத்த காங்கிரஸ்
தலைவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே சித்தராமையா வேட்பாளர்களை மேடையில் அறிவிப்பது சரியல்ல. இவ்வாறு கூறினார்.