Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்றனர்

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்றனர்

By: Nagaraj Sat, 20 May 2023 7:35:43 PM

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்றனர்

பெங்களூரு: முதல்வராக பதவியேற்றார்... கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்றார். மாநில தலைநகர் பெங்களூரு காந்திரவா மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் சித்தராமையாவுக்கு ஆளுநர் தவர்சந்த் கெளட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் டி.கே.சிவகுமார், எம்.பி.பாட்டீல், பரமேஸ்வரா, முனியப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோலி, ஜமீர் அகமது கான், ராமலிங்க ரெட்டி, பிரியங்க் கார்கே ஆகியோர் அமைச்சரவையில் பதவியேற்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சுகு, சரத் பவார் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, கமல்ஹாசன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

chief minister,inauguration,karnataka,siddaramaiah,today ,இன்று, கர்நாடகா, சித்தராமையா, பதவியேற்பு, முதலமைச்சர்

ஏற்கனவே 2013-18 காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதலமைச்சராக இருந்தார். தற்போது இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

Tags :