Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் கையெழுத்து இயக்கம்

சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் கையெழுத்து இயக்கம்

By: Nagaraj Thu, 13 July 2023 6:41:30 PM

சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் கையெழுத்து இயக்கம்

பொன்னேரி: சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் கையெழுத்து இயக்கம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் தொடங்கப்பட்டது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வறண்ட மாவட்டம் என்று சொல்லப்படக்கூடிய அரியலூர் மாவட்டத்தில் விளைச்சலை உருவாக்கும் பொருட்டு நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்த சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக 5 லட்சம் கையெழுத்தை பெற்று தமிழக அரசிடம் அளிக்கும் கையெழுத்து இயக்கத்தை அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் இன்று தொடங்கினார்.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில், சோழர் பாசன திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு நாள் நடை பயணத்தை அரியலூரில் நடத்தி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக 5 லட்சம் கையெழுத்தை பெற்று தமிழக அரசுக்கு கொடுக்கும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

cholar irrigation,project,lakes,signature movement,application,tamil nadu ,
சோழர் பாசனம், திட்டம், ஏரிகள், கையெழுத்து இயக்கம், பயன்பாடு, தமிழகம்

இந்த திட்டத்தின் மூலம் வறண்ட பகுதியாக உள்ள அரியலூர் மாவட்டம் தஞ்சாவூர் போல் பாசன வசதி கொண்ட முப்போகம் அறுவடை கொண்ட மாவட்டமாக மாற வாய்ப்பு ஏற்படும்.

இதற்காக தமிழ்நாடு அரசு முதலில் 5000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிறகு 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரியலூர் மாவட்ட மாவட்டம் முழுவதும் தண்ணீர் சென்றடைவது உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ளது வண்டல் மண், இது விவசாயத்திற்கு உகந்த மண், இந்த மண்ணை சிமெண்ட் தொழிற்சாலைகள் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது.

சோழர் பாசன திட்டம் செயற்படுத்தப்பட்டால் 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற வழி ஏற்படும் என்று கூறினார்.மேலும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 42 ஆயிரம் ஏரிகள் தமிழ்நாட்டில் இருந்தது, அவை அனைத்தையும் மன்னர்கள் தான் உருவாக்கினார்கள் . தற்போது 35 ஆயிரம் ஏரிகள் தான் இருக்கிறது. அதிலும் 23 ஆயிரம் ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது என்றும் கூறினார்.

Tags :
|