நியூயார்க்கில் தகராறில் தாக்கப்பட்ட சீக்கியர் பலி
By: Nagaraj Tue, 24 Oct 2023 5:12:07 PM
நியூயார்க்: தகராறில் தாக்கப்பட்ட சீக்கியர் உயிரிழப்பு... அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கார் விபத்து தொடர்பான தகராறில் தாக்கப்பட்ட சீக்கியர் உயிரிழந்தார்.
குயின்ஸ் என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன் 66 வயதான ஜஸ்மெர் சிங் சென்ற காரும், கில்பர்ட் அகஸ்டின் என்பவரின் காரும் மோதிக்கொண்டன.
காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க முயன்ற ஜஸ்மெர் சிங்கின் போனை கில்பர்ட் பறித்துக்கொண்டதால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது, கில்பர்ட் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜஸ்மெர் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரிச்மண்ட் ஹில் பேருந்து நிறுத்தத்தில் சில நாட்களுக்கு 19 வயது சீக்கிய இளைஞரை கிறிஸ்டோபர் என்ற அமெரிக்கர் தாக்கி அவரது டர்பனை கழற்ற முயற்சித்ததுடன் அவதூறாகப் பேசியதாகவும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.