Advertisement

எறும்புத் தொல்லையை போக்க எளிய வழிமுறைகள்

By: Nagaraj Sat, 03 Oct 2020 09:15:23 AM

எறும்புத் தொல்லையை போக்க எளிய வழிமுறைகள்

எறும்புத் தொல்லை அதிகமாக உள்ளதா. எளிமையான முறையில் அதற்கு தீர்வு காணும் வழிகள் உங்களுக்காக.

எறும்புத்தொல்லை இல்லாத வீடுகளே இல்லை. மூலை முடுக்குகள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள் என எந்த வழியிலாவது எறும்புகள் வந்துவிடும். குறிப்பாக வேர்கடலை போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை பாக்கெட் போட்டு வைத்தாலும், பாக்கெட்டை துளைத்துவிட்டு எல்லாவற்றையும் மொய்த்துவிடும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எறும்பின் மூலமாக உணவில் பரவும்.

சில எறும்புகள் மனிதர்களைக் கடித்துவிடும். மற்றொரு புறம் கரையான்கள், இது கதவு, ஜன்னல் போன்ற மரக்கட்டை பொருட்களை அப்படியே அரித்துவிடும். இவ்வாறு நம்மைச் சுற்றிலும் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ்களை இங்குக் காணலாம்.

ant harassment,vinegar,pepper,basil rot,lemon juice ,எறும்பு தொல்லை, வினிகர், மிளகு, துளசி வாடை, எலுமிச்சை சாறு

எலுமிச்சை வாடை எறும்புக்கு பிடிக்காது. எனவே தரையை சுத்தம் செய்யும் போது, தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம்.

இதே போல், ஆரஞ்சு வாடையும் எறும்புக்குப் பிடிக்காது. ஒரு கப்பில் வெதுவெதப்பான நீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.

எறும்புக்கு இனிப்பு எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு நேர்மாறாக காரம் சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக மிளகு இருந்தால், அந்த வாடைக்கு எறும்பு எட்டிக்கூட பார்க்காது.

இதே போல், எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உப்பைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பு சேர்த்து, நன்றாக கலக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலம் எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம். அதேபோல் எறும்புக்கு வினிகர் நறுமணம் ஆகாது. எறும்பு வரும் இடத்தில் வினிகரை சிறிதளவு ஊற்றினால் போதும். எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசி செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கவும். பின்னர், அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போடவும்.

Tags :
|