Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம்

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம்

By: Karunakaran Mon, 17 Aug 2020 2:24:00 PM

உமிழ்நீர் மூலம் கொரோனா வைரசை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 53.61 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் நடக்கிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் அங்குதான் பரிசோதிக்கப்படுகின்றன. இதனால் அவ்வப்போது, பரிசோதனை கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கொரோனா பரிசோதனைகளை விரைவாக கண்டறிய எளிதாக உமிழ்நீர் மூலம் கண்டறியும்‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கப்பட்டுள்ளது.

simple test,corona virus,saliva,united states ,எளிய சோதனை, கொரோனா வைரஸ், உமிழ்நீர், அமெரிக்கா

யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக்கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அன்னே வில்லி ஆகியோரால் இந்த பரிசோதனை முறை முன்னெடுக்கப்பட்டது. இதனை அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அனுமதித்து விட்டது. ‘சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறை, அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள், ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.

இந்த சோதனை எளிமையானது, செலவு குறைவானது, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்ததாகும். இது அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உமிழ் நீர் விரைவாகவும், எளிதாகவும் சேகரிக்கப்படுவதால் இது கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் போக்கிலேயே மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என உணர்ந்ததாக விஞ்ஞானி அன்னே வில்லி கூறியுள்ளார்.

Tags :
|