Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகப்பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக எளிய குறிப்புகள்!

முகப்பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக எளிய குறிப்புகள்!

By: Monisha Fri, 23 Oct 2020 10:56:56 AM

முகப்பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக எளிய குறிப்புகள்!

சில நேரங்களில் அழகான முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு முகத்தில் பயங்கரமான வலி, வீக்கம், தழும்புகள் ஏற்படுகின்றன. இதனால் அவர்களின் முகத்தில் உள்ள பொலிவு குறைகிறது. ஆனால் இந்த முகப்பருக்களை எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருள்களை கொண்டு கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

முகப்பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக
தேவையான பொருட்கள்
கடுகு எண்ணெய் – சிறிதளவு
எலுமிச்சை – 1
உப்பு – சிறிதளவு

பயன்படுத்தும் முறை
முதலாவது எலுமிச்சை பழத்தின் சாற்றை ஒரு பவுலில் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் அதனுடன் கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி அதை முகத்தில் தடவி கொள்ளுங்கள். இப்படி 10 நிமிடம் இந்த சாற்றை கொண்டு முகத்தை மசாஜ் செய்து கொள்ளுங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை நன்கு கழுவி விடுங்கள். அப்படி செய்து வந்தால் முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.

acne,face,lemon,yogurt,scars ,முகப்பருக்கள்,முகம்,எலுமிச்சை,தயிர்,தழும்புகள்

பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய
தேவையான பொருட்கள்
கடலை மாவு
தயிர்
கடுகு எண்ணெய்
உப்பு

பயன்படுத்தும் முறை
பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்க கடலை மாவுடன் தயிர், சிறிதளவு கடுகு எண்ணெய்யை மற்றும் அவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து தழும்புகள் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வர ஒரு வாரத்தில் அந்த தழும்புகள் இருந்த இடம் காணமல் போகும்.

Tags :
|
|
|
|