Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைசுக்கு எளிய முறையில் திருமணம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைசுக்கு எளிய முறையில் திருமணம்

By: Karunakaran Sat, 18 July 2020 09:46:11 AM

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி பீட்ரைசுக்கு எளிய முறையில் திருமணம்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைசுக்கு வயது 31 ஆகிறது. தற்போது பீட்ரைசுக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

எடோர்டோ மாபெல்லி மோஷி என்பவருக்கும், பீட்ரைசுக்கும் திருமணம் நடைபெற்றது. எடோர்டோ மாபெல்லி கோடீஸ்வரரும், பிரபல தொழிலதிபரும் ஆவார். எடோர்டோ மாபெல்லிக்கு வயது 37 ஆகிறது. இவர்களது திருமணம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு கடந்த மே மாதம் பிரமாண்டமான முறையில் திருமணம் நடக்க இருந்தது.

beatrice,england,marriage,queen elizabeth ,பீட்ரைஸ், இங்கிலாந்து, திருமணம், ராணி எலிசபெத்

கொரோனா ஊரடங்கு காரணமாக பீட்ரைசு திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இளவரசி பீட்ரைசுக்கும் எடோர்டோ மாபெல்லி மோஷிக்கும் ரகசியமான முறையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில் ராணி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிலீப் மற்றும் மகன் ஆண்ட்ரூவுடன் கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த திருமண விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :