Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்காயங்களால் பாடகி லிசா இறந்தததாக தகவல்

எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்காயங்களால் பாடகி லிசா இறந்தததாக தகவல்

By: Nagaraj Fri, 14 July 2023 8:49:03 PM

எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் உள்காயங்களால் பாடகி லிசா இறந்தததாக தகவல்

அமெரிக்கா: உள்காயங்களால்தான் உயிரிழந்துள்ளார்... அமெரிக்க பாடகி லிசா பிரஸ்லி எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது குடல் பகுதியில் ஏற்பட்ட உள்காயங்களால் உயிரிழந்தது 6 மாதங்களுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரபல பாடகர் எல்விஸ் பிரஸ்லியின் மகளும், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவியுமான லிசா பிரஸ்லி கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். இயற்கையாக ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

tissues,small intestine,obstruction,medical examination,singer,death ,திசுக்கள், சிறுகுடல், அடைப்பு, மருத்துவ ஆய்வு, பாடகி, மரணம்

பல ஆண்டுகளுக்கு முன் அவர் பேரியாட்ரிக் (bariatric) என்றழைக்கப்படும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது சிறுகுடல் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து அங்கு புதிதாக வளர்ந்த திசுக்களால் சிறுகுடலில் அடைப்பு ஏற்பட்டு, மாரடைப்புக்கு வழிவகுத்தது தற்போது வெளியாகி உள்ள மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

Tags :
|