Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

By: Nagaraj Fri, 25 Sept 2020 3:20:28 PM

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு குடியரசுத் தலைவர் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அதே போல் பிரதமர் மோடி, தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., தேமுதிக தலைவர் விஜயகாந்த் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நிலையில் உயிரிழிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இசை நாயகன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவையடுத்து, இந்திய இசையுலகம் ஒரு மெல்லிய குரலை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற ரசிகர்களால் பாடும் நிலா' அல்லது 'சிங்கிங் மூன்' என்று அழைக்கப்படும் எஸ்.பி.பி. பத்ம பூஷண் உள்ளிட்ட பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

president of the republic,funeral,funeral tomorrow,farm house ,குடியரசு தலைவர், இரங்கல், நாளை இறுதிச்சடங்கு, பண்ணை வீடு



பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவினால் இந்த இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக அனைத்து வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் ஓய்ந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி' எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.அதில், திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற எஸ்.பி.பி.யின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மறைவு தன்னை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. தலைமுறைகளை கடந்து அனைத்து நடிகர்களுக்கும் பாடிய தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பி. எனவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். எங்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வாய் என்று எஸ்.பி.பி. மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எஸ்.பி.பி இறுதி சடங்கு விவரம் தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதையடுத்து செங்குன்றம் தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அவரது இறுதிச்சடங்கிற்காக பணிகள் நடைபெறவுள்ளது. அங்கு அவருக்கு சமாதி கட்ட புல்டோசர் வைத்து இடத்தை சமன் செய்து வருகின்றனர்.பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் நாளை அவரின் இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.

Tags :