Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒற்றை நாற்று நடவு முறை... விவசாயியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

ஒற்றை நாற்று நடவு முறை... விவசாயியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

By: Nagaraj Tue, 26 May 2020 09:01:17 AM

ஒற்றை நாற்று நடவு முறை... விவசாயியின் புதிய முயற்சிக்கு வரவேற்பு

விவசாயியின் புதிய முயற்சி... ஒற்றை நாற்று நடவு முறை மூலம், 1 கிலோ விதை நெல்லில், 1 ஏக்கர் நடவு செய்துள்ள விவசாயியின் புதிய முயற்சி, சக விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

மீஞ்சூர் ஒன்றியத்தில். அடர் நடவு, தொடர் நடவு, இயந்திர நடவு என, விவசாயிகள் நடவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.பொன்னேரி அடுத்த, இலுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி விஜயகுமார், குறைந்த செலவில் அதிக மகசூல் தரும் ஒற்றை நாற்று நடவு முறையை பின்பற்றி, நடவுப் பணிகளை மேற்கொண்டு உள்ளார்.

ஒற்றை நாற்று முறையில், 30க்கு, 30 சதுர செ.மீ., சீரான இடைவெளியில் நேர்த்தியான வரிசையில் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மீஞ்சூர் ஒன்றியத்தில், முதன் முறையாக மேற்கொண்டுள்ள இவரது புதிய முயற்சி சக விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

planting,new venture,1 kg seed paddy,single seedling ,நடவுப்பணி, புதிய முயற்சி, 1 கிலோ விதை நெல், ஒற்றை நாற்று நடவு

இது குறித்து விவசாயி விஜயகுமார் தெரிவித்ததாவது: ஒற்றை நாற்று நடவு முறையில், இது ஒரு புதிய முயற்சி. வேளாண் ஆர்வலர் ஆலங்குடி பெருமாள், இந்த நடவு முறையை அறிமுகப்படுத்தியதால், அவர் பெயர் கொண்டுள்ளது. மற்ற நடவு முறைக்கு, 1 ஏக்கருக்கு, 30 கிலோ விதை நெல் தேவைப்படும் நிலையில் இதற்கு, 1 கிலோ மட்டும் போதுமானது. நல்ல மகசூல் கிடைக்கும்.

சாதாரண நடவு முறையில், 30 மூட்டை என்றால், இதில், 50 மூட்டை வரை எதிர்பார்க்கலாம். நடவுப் பணிகளும் எளிதாகவே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :