Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சித்தராமையா மூத்த தலைவர், அவருக்கு உள்ள அனுபவத்தை நான் மதிக்கிறேன் - டி.கே.சிவக்குமார்

சித்தராமையா மூத்த தலைவர், அவருக்கு உள்ள அனுபவத்தை நான் மதிக்கிறேன் - டி.கே.சிவக்குமார்

By: Karunakaran Mon, 22 June 2020 12:59:39 PM

சித்தராமையா மூத்த தலைவர், அவருக்கு உள்ள அனுபவத்தை நான் மதிக்கிறேன் - டி.கே.சிவக்குமார்

கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்தார்.

சுமார் 3 மாதங்களுக்கு பின், தினேஷ் குண்டுராவின் ராஜினாமா கடிதத்தை மட்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அங்கீகரித்தார். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் சித்தராமையாவே நீடிக்க காங்கிரஸ் அனுமதித்தது. அதன்பின் காலியாக இருந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு வழங்கலாம் என சித்தராமையாவிடம் சோனியா காந்தி ஆலோசனை கேட்டார்.

dk sivakumar,sitaramaiah,congress leader,karnataka ,டி.கே.சிவக்குமார் ,சித்தராமையா,கர்நாட கா,காங்கிரஸ் தலைவர்

எம்.பி.பட்டீல் உள்பட சிலரது பெயரை சித்தராமையா மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார். தற்போது, கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். டி.கே.சிவக்குமார் தலைவராக நியமிக்கப்பட்ட பின் சித்தராமையாவுக்கும், அவருக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்ற கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் ஒரு பலம் வாய்ந்த கட்சி. சித்தராமையா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ளார். அவர் மூத்த தலைவர் என்ற முறையிலும், அவருக்கு உள்ள அனுபவத்தையும் நான் மதிக்கிறேன். அவருடன் நான் போட்டி போட மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :