Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவ்போஜன் உணவகங்களில் மேலும் 3 மாதத்துக்கு ரூ.5-க்கு மதிய உணவு வழங்க ஒப்புதல்

சிவ்போஜன் உணவகங்களில் மேலும் 3 மாதத்துக்கு ரூ.5-க்கு மதிய உணவு வழங்க ஒப்புதல்

By: Karunakaran Thu, 09 July 2020 12:41:36 PM

சிவ்போஜன் உணவகங்களில் மேலும் 3 மாதத்துக்கு ரூ.5-க்கு மதிய உணவு வழங்க ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதியிலுருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிவ்போஜன் உணவகங்களில் 10 ரூபாய்க்கு பதிலாக ரூ.5-க்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் சிவ்போஜன் உணவகங்களில் மேலும் 3 மாதத்துக்கு ரூ.5-க்கு மதிய உணவு வழங்கவும், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கு வறுமை கோட்டுக்கு மேல் உள்ள ஆரஞ்சு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுபொருட்கள் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

sivbhojan,provide lunch,agreed,maharastra ,சிவ் போஜன், மதிய உணவு , ஒப்புதல், மகாராஷ்டிரா

இதுதொடர்பாக, நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவ்போஜன் உணவகங்களில் மேலும் 3 மாதத்துக்கு ரூ.5-க்கு மதிய உணவு வழங்கவும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ள ஆரஞ்சு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுபொருட்கள் வழங்க ஒப்புதலளிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் பெயரை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் என மாற்றவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
|