Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை

By: vaithegi Wed, 20 July 2022 12:07:49 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை

உத்தரகாண்ட் : கன்வர் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். இந்த யாத்திரையின் பொழுது யாத்ரீகர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் போன்ற பகுதிகளுக்கு கங்கை நதியின் புனித நீரை எடுத்து செல்வது வழக்கம். பின் இந்த நீரை வைத்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.

மேலும், 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை இந்த ஆண்டு நடைபெற இருப்பதால் 5 கோடிக்கும் அதிகமான யாத்ரீகர்கள் கன்வர் யாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

holiday,uttarakhand ,விடுமுறை,உத்தரகாண்ட்

இந்நிலையில் கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14-ஆம் தேதி தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்கள் இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் ஹரித்வார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை வரும் இன்று (ஜூலை 20) முதல் ஜூலை 26ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கன்வர் யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்ததுக்கொண்டே இருப்பதால் யாத்திரை நடைபெறுவதற்கான சாலைகள் மூடப்பட சாத்தியக்கூறுகளும் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ஹரித்வாரில் கன்வார் யாத்திரை செல்லும் புனிதப் பாதையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று ஹரித்வார் டிஎம் வினய் சங்கர் பாண்டே அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :