Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

By: Karunakaran Sun, 27 Dec 2020 12:02:06 PM

இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி

சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிழவி வருகிறது. உள்நாட்டு போரால் பேரழிவை சந்தித்துள்ள இருநாடுகளும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டே இருக்கின்றனர். மேலும், இரு நாட்டு எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற ஈரான் புரட்சிப்படை பிரிவினர், வெளிநாட்டு போராளிகளும் பலர் பதுங்கியுள்ளனர்.

இவர்கள் சிரியாவில் இருந்தவாறு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை அழிக்க இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் அவ்வப்போது விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.

pro-iranian rebels,israel,air strike,syria ,ஈரானிய சார்பு கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல், வான்வழித் தாக்குதல், சிரியா

இந்நிலையில், சிரியாவில் உள்ள ஹாமா மாகாணத்தில் பதுங்கி இருந்த ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் நேற்று வான்வெளி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலை சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|