Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க ஆறு மாநிலங்கள் சீராய்வு செய்துள்ளோம் - மம்தா பானர்ஜி

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க ஆறு மாநிலங்கள் சீராய்வு செய்துள்ளோம் - மம்தா பானர்ஜி

By: Karunakaran Fri, 28 Aug 2020 6:27:38 PM

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க ஆறு மாநிலங்கள் சீராய்வு செய்துள்ளோம் - மம்தா பானர்ஜி

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த மத்திய தேர்வு முகமை முடிவு செய்து, அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டு, ஹால்டிக்கெட்டையும் வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு மத்தியில் இந்த தேர்வு நடத்தப்படுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்வை நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று காங்கிரஸ் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.

six state,postpone,neet exam,mamata banerjee ,ஆறு மாநிலம், ஒத்திவைத்தல், நீட் தேர்வு, மம்தா பானர்ஜி

6 மாநிலங்கள் இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன. இதுகுறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், 7-8 மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதன்பின் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தோம். அந்த மனுவில் ஆறு மாநில அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அதில், மேற்கு வாங்காளம் சார்பில் மோலோய் கதக் கையெழுத்திட்டுள்ளதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். இந்நிலையில், மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இரண்டு தேர்வுகளை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்


Tags :