இங்கிலாந்தில் வீடற்ற 16 பேர் கொரோனாவால் பலியானதாக தகவல்
By: Nagaraj Fri, 10 July 2020 8:59:44 PM
வீடற்ற 16 பேர் கொரோனாவால் பலி... முடக்கநிலையின் முதல் மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வீடற்ற 16பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்ததாக அறியமுடிகின்றது.
ஆனால், இந்த எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஒவ்வொரு மரணமும் அடையாளம் காணப்பட வாய்ப்பில்லை என்றும் தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் ஆண்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது
சராசரி வயது 58 ஆகும். இவர்களது இறப்புச் சான்றிதழ்களில், கொவிட்-19 ஒரு
அடிப்படைக் காரணம் அல்லது பங்களிப்பு காரணியாகக் குறிப்பிட்டுள்ளன.
ஆனால், பொது மக்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஆண்களில் சராசரி வயது 79 ஆகும்.
Tags :
homeless |
freeze |
corona |
kills |