Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை வென்றது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா

கொரோனாவை வென்றது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா

By: Nagaraj Sat, 16 May 2020 4:02:29 PM

கொரோனாவை வென்றது ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியா

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள ஸ்லோவேனியாவுக்கு குவியும் பாராட்டுக்கள்... உலகம் முழுவதும் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் கடுமையாக பாதிப்படைந்தன.

இதில் இத்தாலியின் அண்டை நாடான ஸ்லோவேனியா கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளது. 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஸ்லோவெனியா, இத்தாலியை அண்டை நாடாகக் கொண்டுள்ளது. இதுவரை அங்கு 1,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 103 பேர் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள்.

world nations,appreciation,prevention,slovenia ,
உலக நாடுகள், பாராட்டு, தடுப்பு நடவடிக்கை, ஸ்லோவெனியா

கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதனால், நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டதாக ஸ்லோவெனியா அரசு அறிவித்துள்ளது. இதை பற்றி பேசிய ஸ்லோவெனியா நாட்டு பிரதமர் ஜானெஸ் ஜென்ஸா, "ஸ்லோவெனியா ஐரோப்பாவிலேயே கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்படாத இடத்தில் இருக்கிறது. இதனால், இந்த நோய்த் தொற்றிலிருந்து நாம் விடுபட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்லோவெனியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்தது. தற்போது கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்நாட்டு அரசுக்கு உலக நாடுகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.

Tags :