Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 9:57:21 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுவதால் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு

தூத்துக்குடி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி திறன் குறைவாக உள்ளதால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் போதுமான மின்சாரம் விநியோகம் இல்லாத காரணத்தினால் தான் மின் தடைகள் ஏற்படுகின்றது. இதனால் மத்திய அரசுடன் கலந்துரையாடி நல்ல தீர்வினை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் கூடிய விரைவில் மின் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.இந்தியா வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ளது. மேலும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சி அதிகமடைந்துள்ளது.

thoothukudi,power outage ,தூத்துக்குடி , மின்தடை

மேலும் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் விரிவாக்கப்பட்டு வருகிறது. இதற்காகவே குறிப்பிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றது.இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாகவே மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணியால் மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு மின்வாரியத்தில் மின்தடை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை(ஆகஸ்ட் 13)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர் 10,11,12 வது தெரு, கே.வி.கே.நகர், டூவிபுரம் 5 முதல் 10 வது தெரு வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற மின்சார செயற்பொறியாளர் ராம்குமார்
அறிவித்துள்ளார்.

Tags :