Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குமரியிலிருந்து கேரளாவிற்கு 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; டெம்போ பறிமுதல்

குமரியிலிருந்து கேரளாவிற்கு 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; டெம்போ பறிமுதல்

By: Monisha Mon, 14 Dec 2020 11:56:57 AM

குமரியிலிருந்து கேரளாவிற்கு 3½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; டெம்போ பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிகளவில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. அவற்றை தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் விளவங்கோடு தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அதிகாலை குழித்துறை அடுத்த மலைஅடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ration rice,smuggling,tempo,seizure,investigation ,ரேஷன்அரிசி,கடத்தல்,டெம்போ,பறிமுதல்,விவசாரணை

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால், டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், வாகனத்தில் டெம்போவை துரத்திச் சென்றனர். அதிகாரிகள் விரட்டி வருவதை கண்ட டிரைவர் மேலும் வேகமாக ஓட்டினார். இதில், எதிர்பாராத விதமாக டெம்போ மலையடி மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதியது. உடனே, டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பிச் சென்றார்.

பின்னர், அதிகாரிகள் டெம்போவை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூட்டைகளில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து, டெம்போவை குழித்துறை தாலுகா அலுவலகத்திலும், அரிசியை காப்பிக்காடு அரசு குடோனிலும் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து விவசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|