Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 14 Aug 2020 5:06:47 PM

மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மஹாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மேலும். சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளில் 292 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

maharashtra,jail,corona virus,prisoners ,மகாராஷ்டிரா, சிறை, கொரோனா வைரஸ், கைதிகள்

தற்போது அம்மாநிலத்தில் சிறைக்கைதிகள், சிறைத்துறை அதிகாரிகள் என கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,292 ஆக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளதாக மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலே கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா பலி எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மஹாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கர்நாடகத்திலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|