Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 2.37 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 2.37 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Mon, 22 June 2020 1:17:21 PM

இந்தியாவில் இதுவரை கொரோனாவிலிருந்து 2.37 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உயர்ந்தாலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 4,25,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 14,821 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 445 பேர் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

india,corona recover,corona virus,corona death ,இந்தியா,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13699 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,37,196 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,74,387 பேர் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டிலே கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலாவதாக உள்ளது கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 132075 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 59377 பேருக்கும், டெல்லியில் 59746 பேருக்கும், குஜராத்தில் 27260 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 11903 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
|