Advertisement

பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை 340 பேர் கைது

By: Karunakaran Sun, 16 Aug 2020 3:24:55 PM

பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை 340 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் சகோதரியின் மகன் நவீன் என்பவர் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்தினை பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக, கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி வன்முறை வெடித்தது.

எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல்நிலையம், அப்பகுதிகளில் இருந்த குடியிருப்பு பகுதிகளை நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் சூறையாடினர். வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50 போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

bangalore violence,corona virus,arrest,corona prevalence ,பெங்களூர் வன்முறை, கொரோனா வைரஸ், கைது, கொரோனா பாதிப்பு

அவதூறு கருத்து பதிவு செய்தது குறித்து நவீனை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான் என நவீன் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் உள்பட 340 பேரை கைது செய்துள்ளனர்.

வன்முறை காரணமாக கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் சேதமடைந்த பொது சொத்திற்கான தொகையை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என மாநில மந்திரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags :
|