Advertisement

மதுரை மாவட்டத்தில் இதுவரை 40 பேர் டெங்குவால் பாதிப்பு

By: vaithegi Fri, 26 Aug 2022 8:30:22 PM

மதுரை மாவட்டத்தில் இதுவரை 40 பேர் டெங்குவால் பாதிப்பு

மதுரை: தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய குரங்கு அம்மை இந்தியாவிலும் பரவத் தொடங்கியதால் தமிழகத்தில் தடுப்பு பணிகள் மிக தீவிரப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து இதற்கு மத்தியில் மதுரை மாவட்டத்தில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

dengue,madurai ,டெங்கு,மதுரை

தற்போது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் இதுவரை 40 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மழை காலங்களில் தேங்கியுள்ள கழிவு நீரின் காரணமாக டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்

ஆனால் தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெங்கு பரவும் அபாயம் உயர்ந்துள்ளது.

Tags :
|