Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதுவரை 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக தகவல்

இதுவரை 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக தகவல்

By: vaithegi Mon, 06 Feb 2023 6:37:22 PM

இதுவரை 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக தகவல்

இந்தியா: இணைக்க மார்ச் 31 கடைசி நாள் ... இந்தியாவில் மத்திய ஆதார் அமைச்சகத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டை, அடையாள ஆவணமாக விளங்கி கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது ஆதார எண் இருந்தால் மட்டுமே அரசின் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

எனவே இந்த ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.தற்போது ஆதாரை போலவே பான் கார்டும் மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. நாட்டில் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், பண பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை கண்டறியவும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

aadhaar number,pan number ,ஆதார் எண், பான் எண்

இதனை அடுத்து இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டு அவை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது.இந்த காலகெடுவுக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1000 செலுத்தி பான் – ஆதாரை இணைத்து கொண்டு வருகின்றனர்.

இதற்கு 2023 மார்ச் மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேதிக்குள் மேற்சொன்ன நடவடிக்கையை முடிக்காதவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை மட்டும் 48 கோடி பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :