Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 13 ஆயிரத்து 306 பேர் உயிரிழப்பு

கொரோனாவால் உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 13 ஆயிரத்து 306 பேர் உயிரிழப்பு

By: vaithegi Wed, 15 Mar 2023 10:55:20 AM

கொரோனாவால்  உலகம் முழுவதும் இதுவரை 68 லட்சத்து 13 ஆயிரத்து 306 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.17 கோடியாக உயர்வு.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

death,corona ,உயிரிழப்பு ,கொரோனா

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 17 லட்சத்து 61 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 1 லட்சத்து 36 ஆயிரத்து 373 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 65 கோடியே 48 லட்சத்து 11 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 68 லட்சத்து 13 ஆயிரத்து 306 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|