Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிற்கு இதுவரை 6,892,220 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு இதுவரை 6,892,220 பேர் உயிரிழந்துள்ளனர்

By: vaithegi Sun, 18 June 2023 2:32:46 PM

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு இதுவரை 6,892,220 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியா: உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் துவங்கிய கொரோனா தொற்று தற்போது வரைக்கும் முழுமையாக ஒழிக்கப்பட முடியாமல் ஒரு சில நாடுகளில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும், இந்த கொரோனா தொற்றினை ஒழிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல தடுப்பூசியை கண்டுபிடித்தாலும் தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்போது வரைக்கும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருப்பவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

corona,world ,கொரோனா ,உலகம்

அதாவது, தற்போது வரைக்கும் கொரோனாவினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 6,892,220 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும், தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் கொரோனாவால் 690,430,478 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 662,942,407 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, 37,482 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|