Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 15. 13 கோடி அபராதம் வசூல்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 15. 13 கோடி அபராதம் வசூல்

By: vaithegi Sun, 25 June 2023 2:59:13 PM

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 15. 13 கோடி அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிழும், விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதனையடுத்து அதன் ஒரு பகுதியாக, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் ரூ.10,000 அபராதம் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டது. அந்த அபராதம் செலுத்தாவிட்டால் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுயிருந்தது.

penalty,drunkenness ,அபராதம் ,குடிபோதை

இந்நிலையில் , சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடமிருந்து இதுவரை மட்டும் ரூபாய் 15. 13 கோடி அபராதம் வசூல் அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை புறநகர் காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கடந்த 5 மாதங்களாக நிலுவையில் இருந்த 14,13,638 வழக்குகளில் ரூ.15,13,66,600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :