Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடு .. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடு .. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

By: vaithegi Tue, 21 Mar 2023 11:35:08 AM

இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடு ..  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்பு மற்றும் இதுவரை ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு ...

நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை அடுத்து இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.

mrk panneerselvam,crop insurance ,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,பயிர்க்காப்பீடு

இந்த வேளாண் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் வேளாண் பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் ரூ. 723 கோடி பயிர்க்காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :