Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டுமே UPI மூலமாக இத்தனை கோடி பண பரிவர்த்தனை

இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டுமே UPI மூலமாக இத்தனை கோடி பண பரிவர்த்தனை

By: vaithegi Sat, 02 Sept 2023 2:33:06 PM

இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டுமே UPI மூலமாக இத்தனை கோடி பண பரிவர்த்தனை

இந்தியா: UPI மூலமாக ஒரே மாதத்தில் ரூ. 15.18.456.4 கோடி பணம் பரிமாற்றம் ...நாட்டின் சிறந்த பண பரிமாற்ற தளமாக யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) தளம் விளங்கி கொண்டு வருகிறது. மேலும்,UPI மூலமான பணம் பரிமாற்றம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பினையும் வழங்கி கொண்டு வருகிறது.

இதை தொடர்ந்து, பயனாளர்களுக்கு கூடுதல் அனுபவத்தை வழங்கும் வகையில் யுபிஐ பின்னை பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் என்கிற தொழில்நுட்ப அறிமுகம் செய்யப்பட்டது.

transaction,upi ,பரிவர்த்தனை ,UPI

இதன் பின், அதைவிட எளிதாக பயனாளர்கள் தேவையான தொகையை டைப் செய்யாமல் வாய்ஸ் மூலமாகவே எளிதாக தேவையான பணத்தை அனுப்பும்படியான புதிய அப்டேட்டும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெற்று உள்ளதாக தேசிய பண பரிவர்த்தனை கழகம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே ரூ. 15,18,456.4 கோடி பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.


Tags :