Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பரில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை

டிசம்பரில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை

By: vaithegi Wed, 30 Nov 2022 12:45:18 PM

டிசம்பரில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு இத்தனை நாட்கள் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் அட்டவணையின் படி தான் விடுமுறை அறிவிக்கப்பட்டு கொண்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தமிழக அரசு கல்வி ஆண்டின் தொடங்கத்திலேயே வருடம் முழுவத்திற்குமான பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

holiday,tamil govt ,விடுமுறை,தமிழக அரசு

இதனை அடுத்து அதன்படி, தான் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஏதேனும் திடீர் காரணங்கள் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த நிலையில், நாளை தொடங்கும் டிசம்பர் மாதத்தில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளது. அதாவது, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை சேர்த்தும், நடக்க இருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை (24.12.2022 முதல் 01.01.2023), கிறிஸ்துமஸ் (25.12.2022) மற்றும் புத்தாண்டு விடுமுறையும் சேர்த்து மொத்தம் என 15 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags :