Advertisement

சென்னை விமான நிலையத்தில் இத்தனை விமான சேவை ரத்து

By: vaithegi Sat, 10 Dec 2022 10:45:36 AM

சென்னை விமான நிலையத்தில் இத்தனை விமான சேவை ரத்து

சென்னை : விமான சேவை ரத்து .... மாண்டஸ் புயலால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் 70 சீட்டுகளுடன் உள்ள சிறிய ரக விமானங்கள். சிறிய ரக விமானங்கள் பறக்கும் போது 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வந்தால் சமாளிக்க முடியாது.

அதனால் புயல் காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்ததால் புயல் காற்று வேகமாக அடித்தால் இந்த சிறிய ரக விமானத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்பட்டுவிடும்.

அதனால் சிறிய விமானங்களின் சேவையை நிறுத்தி வைக்கும்படி சென்னை விமான நிலையத்திற்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை தெரிவித்து இருந்தது . இதனை அடுத்து சிறிய ரக விமானங்களை புயல் தாக்கம் ஓயும் வரையில் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது .

flights,chennai,cancelled ,விமானங்கள் ,சென்னை ,ரத்து

அதன்படி சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறிய ரக விமானங்கள் தூத்துக்குடி, மைசூர், விஜயவாடா, கோழிக்கோடு, திருச்சி ,மதுரை, பெங்களூரு ,ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12:50 மணிக்கு கொழம்பு சென்று அங்கிருந்து அதிகாலை 4. 20 மணிக்கு சென்னையில் திரும்பும் விமானமும் அபுதாபியில் இருந்து இரவு 7.50 மணிக்கு சென்னை வந்து மீண்டும் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் விமானமும் மாலை 6:00 மணிக்கு சென்னை வந்து காலை 7 மணிக்கு ரியூனியன் சென்ட் டென்னிஸ் புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :