Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எகிறும் போட்டி... செயற்கை தீவை வாங்க முயலும் பெரும் பணக்காரர்கள்

எகிறும் போட்டி... செயற்கை தீவை வாங்க முயலும் பெரும் பணக்காரர்கள்

By: Nagaraj Thu, 07 Sept 2023 06:57:25 AM

எகிறும் போட்டி... செயற்கை தீவை வாங்க முயலும் பெரும் பணக்காரர்கள்

துபாய்: துபாயின் கடல் பகுதியில் உலக தீவுகள் திட்டம் என்ற பெயரில் செயற்கைத் தீவு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தீவு திட்டம் தற்போது முழு வர்த்தக நடவடிக்கையாக மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் அத்தீவுகளை வாங்க உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

எண்ணெய் வளத்தில் தன்னிறைவு பெற்ற துபாய் உலகின் வல்லரசு நாடுகளை விட அதிதீவிர வளர்ச்சியை கண்டு வருகிறது. துபாயில் வளர்ச்சி உலக கோடீஸ்வரர்களை அதன் பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் உலகில் உள்ள கோடீஸ்வரர்களில் மிகப் பெரும்பான்மையானவர் துபாயில் தனக்கென்று தனியாக ஒரு வீடு அமைத்து இருக்கின்றனர்.

துபாயின் ஆடம்பரமான வாழ்க்கை, அதிதீவிர வளர்ச்சி, கட்டிடக்கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவை உலகத்தின் பார்வையை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் துபாயின் 2003 ஆம் ஆண்டு செயற்கைத் தீவு அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு உலகத் தீவு திட்டம் என்று பெயரிடப்பட்டது.

artificial island,lead,billionaire,buy contest,sell ,செயற்கை தீவு, முன்னணி, கோடீஸ்வரர்ள், வாங்க போட்டி, விற்பனை

இதை நாட்டினுடைய அரசர் சேக் முகமது பின் ரஷித்தால் தொடங்கி வைத்தார். இந்த பணியை டச்சு நிறுவனம் செய்து வருகிறது. 2007 - 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட பணி பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு முழு வர்த்தக நடவடிக்கையாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதற்காக துபாயின் கடல் பகுதிகளில் ஆழம் குறைவான இடம் கண்டறியப்பட்டு அங்கு பாரசீக வளைகுடாவில் இருந்து மணல் கொண்டுவரப்பட்டு கொட்டி குவிக்கப்பட்டு சேர்க்கை தீவு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாதுகாப்பிற்காக தீவுகளை சுற்றி பாறைகளும் கொட்டப்பட்டுள்ளன. இந்த பகுதியில் 30 தீவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2.5 லட்சம் சதுர அடி முதல் 9 லட்சம் சதுர அடி வரை கொண்ட பரப்பில் இத்தீவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தீவுகள் விற்பனைக்கும், சுற்றுலாவிற்கும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீவுகளை வாங்க உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் போட்டி போடுகின்றனர். மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் இந்த தீவுகளின் பாதுகாப்பு தற்போது தீவிர பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Tags :
|