Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக அரசின் சமூக நலத்திட்டங்கள்... பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

திமுக அரசின் சமூக நலத்திட்டங்கள்... பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

By: Nagaraj Wed, 26 July 2023 7:02:36 PM

திமுக அரசின் சமூக நலத்திட்டங்கள்... பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

திருச்சி: அமைச்சர் விளக்கம்... திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் திமுக அரசின் சமூக நலத் திட்டங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை மகேஷ் பொய்யாமொழி விளக்கினார்.

2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை கற்பிக்கும் விதமாக திருச்சியில் இன்று ஜூலை 26 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் முதல் அமர்வில் சமூக வலைதளங்களை எவ்வாறு தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அமைச்சர் டி ஆர் பி ராஜா விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து திமுக அரசின் சமூக நலத் திட்டங்களை விவரித்து பள்ளிகளுக்குறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார்.

அப்போது, இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிக்கு வந்தவுடன் சென்ற இடம், 1999 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி தொடங்கிய கார்கில் போர் ஜூலை 26 ஆம் தேதி முடிவடைந்தது.

minister,welfare schemes,explanation,education,votes,collection ,அமைச்சர், நலத்திட்டங்கள், விளக்கம், கல்வித்துறை, வாக்குகள், சேகரிப்பு

அதன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று திருச்சியில் அமைந்துள்ளது சரவணன் நினைவு இடத்திற்கு சென்று முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பிறகு இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

திமுக அரசு பதவி ஏற்றவுடன் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்து இருக்கிறது. இல்லம் தேடி கல்வி என்று கொரோனா ஊரடங்கு காலத்திலும் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும் என்று செயல்பட்ட அரசு திமுக அரசு. பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு சலுகைகள். குறிப்பாக கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதால் கல்லூரி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாணவர்கள் வாசிக்கும் திறனை அதிகப்படுத்த வாசிப்பு இயக்கம் என்று பல்வேறு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. எல்லாக் குடும்பங்களிலும் பள்ளி கல்வித்துறை சார்ந்த பயனாளர் இடம் பெற்றிருப்பார். அதனால் பள்ளி கல்வித்துறை சார்ந்து ஒவ்வொரு திமுகவினரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதையெல்லாம் மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|