Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலக்கோடு ஊராட்சியில் ரூ.1.72 கோடி மதிப்பில் சமுதாய நலப்பணிகள்

பாலக்கோடு ஊராட்சியில் ரூ.1.72 கோடி மதிப்பில் சமுதாய நலப்பணிகள்

By: Monisha Sun, 20 Dec 2020 4:55:11 PM

பாலக்கோடு ஊராட்சியில் ரூ.1.72 கோடி மதிப்பில் சமுதாய நலப்பணிகள்

பாலக்கோடு தாலுகா பெலமாரணஅள்ளி, பேவுஅள்ளி, அத்திமுட்லு ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1.72 கோடி மதிப்பில் தார்சாலை மற்றும் சமுதாய கூடம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றியக்குழு தலைவர் பாஞ்சாலை கோபால், கூட்டுறவு சங்கத்தலைவர் சரவணன், உதவி பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

panchayat,welfare,minister,ceremony,darsala ,ஊராட்சி,நலப்பணிகள்,அமைச்சர்,விழா,தார்சாலை

விழாவில் அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசியதாவது:- பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18.73 கி.மீ. தொலைவிற்கு ரூ.5.17 கோடி மதிப்பில் 13 தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெலமாரணஅள்ளி ஊராட்சியில் பூமரத்துப்பள்ளம் முதல் பி. சாத்தி ஏரி வரை ரூ.61.54 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைத்தல் பணி நடக்கிறது.

இதேபோன்று பேவுஅள்ளி ஊராட்சியில் சீரியம்பட்டி முதல் பொன்னுசாமி கொட்டாய் வரை ரூ.35.88 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அத்திமுட்லு கிராமத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம், உணவு அருந்தும் கூடம் கட்டும் பணிகள் ரூ.1.72 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் கூறினார்.

Tags :