Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சூரிய கிரகணம்; இன்று இரவு முதல் திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது

நாளை சூரிய கிரகணம்; இன்று இரவு முதல் திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது

By: Nagaraj Sat, 20 June 2020 6:03:10 PM

நாளை சூரிய கிரகணம்; இன்று  இரவு முதல் திருப்பதி கோயில் நடை சாத்தப்படுகிறது

இன்று இரவு நடை சாத்தப்படுகிறது... நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இன்று இரவு முதல் சாத்தப்படுகிறது. நாளை காலை 10.18 முதல் 13.38 வரை நடைபெறும் சூரிய கிரகணத்தை இந்தியாவின் சில இடங்களில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று இரவு 8.30 மணிக்கு மேல் ஏகாந்த சேவை முடிந்த பின் கோவில் நடை சாத்தப்படுகிறது. நாளை பிற்பகல் 2.30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் அதனைத் தொடர்ந்து சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளும் நடைபெறும்.

thirupathi,walking,devasthanam,information,solar eclipse ,
திருப்பதி, நடை சாத்தப்படுகிறது, தேவஸ்தானம், தகவல், சூரிய கிரகணம்

நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அன்னதான பிரசாதங்கள், தலைமுடி காணிக்கை கூடங்களும் செயல்படாது என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை செய்யப்பட்டு இருந்தது.

தற்போது குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆன்லைனில் புக் செய்து தரிசன டிக்கெட் செய்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின்னர் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுதான் வரவேண்டும் என்பதும் முக்கியமானதாகும். நாளை சூரிய கிரகணம் என்பதால் நடை சாத்தப்படுகிறது. இதனால் பக்தர்கள் வந்து ஏமாந்து செல்லக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அறிவிப்பு வெளிட்டுள்ளனர்.

Tags :