Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டன் ரீடிங் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பற்றிய திடுக் தகவல்

பிரிட்டன் ரீடிங் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பற்றிய திடுக் தகவல்

By: Nagaraj Mon, 22 June 2020 12:05:25 PM

பிரிட்டன் ரீடிங் பூங்கா கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய வாலிபர் பற்றிய திடுக் தகவல்

கத்தியால் தாக்குதல் நடத்திய வாலிபர்... பிரிட்டன் ரீடிங் பகுதியில் பூங்கா ஒன்றில் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்த இளைஞர் 16 நாட்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து விடுதலையானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரீடிங் பகுதியில் 3 பேர் கொல்லப்பட காரணமான இளைஞர் கைரி சதல்லா பயங்கரவாத தொடர்புகளின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரிட்டன் உளவு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.

சிரியாவுக்கு சென்று இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து சண்டையில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் ஆசைப்பட்டுள்ளார். லிபியா நாட்டு புகலிடக் கோரிக்கையாளரான 25 வயது கைரி சதல்லா, 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாவதற்கு முன்னர் மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான கோளாறுக்கான மருந்துகள் எடுத்து வந்துள்ளார்.

attack incident,plaintiff,britain,youth,libya ,தாக்குதல் சம்பவம், வாலிபர், பிரிட்டன், இளைஞர், லிபியா

மேலும் 2018 ஆம் ஆண்டில் வன்முறைக்கான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது. சனிக்கிழமை சதல்லா முன்னெடுத்த தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு, மூவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதற்கு காரணம் அவர் உரிய மருந்துகளை உட்கொள்ளாமல் விட்டுவிட்டார் என்றே விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் பிரிட்டனின் MI5-ன் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சனையும் கொண்ட ஒரு இளைஞரை பிரிட்டன் ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது.

ஆனால் லிபியாவில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சதல்லா அங்கிருந்து தப்பித்துக் கொள்ள பிரிட்டன் வந்ததாகவும், அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாகவும் உறவினர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Tags :
|