Advertisement

சென்னை முக்கிய ரயில் சேவைகளில் சில மாற்றம்

By: vaithegi Tue, 05 Sept 2023 4:48:49 PM

சென்னை முக்கிய ரயில் சேவைகளில் சில மாற்றம்


சென்னை : இந்தியாவில் நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும், பாதுகாப்பு பணி மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக ரயில் சேவையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், சாய் நகர் ஸ்ரீரடி அதி விரைவு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அதாவது, நாளை முதல் வருகிற அக்.4ம் தேதி வரையிலும் பெங்களூரிலிருந்து புறப்படும் லால்பாக் விரைவு ரயில் காலை 6:20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் என்றும், கோவையிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் காலை 6:20 மணிக்கு காட்பாடியுடன் நிறுத்தப்படும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

railway service,chennai ,ரயில் சேவை,சென்னை

அடுத்ததாக, சென்னை சென்ட்ரலிருந்து மைசூர் செல்லும் அதிவிரைவு ரயில் பிற்பகல் 1:35 மணிக்கு புறப்படும் என்றும், கோவைக்கு பிற்பகல் 2; 35 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்ட்ரலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்த புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்ததாக, காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் அரக்கோணத்துடன் நிறுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலிருந்து சாய் நகர் ஸ்ரீரடி செல்லும் அதி விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12;20 மணிக்கு புறப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :