Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள்

பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள்

By: vaithegi Fri, 21 Oct 2022 2:08:34 PM

பள்ளி பேருந்துகளில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள்

சென்னை: கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிமுறைகள் ..... தமிழகம் முழுவதும் அதிக அளவிலான தனியார் பள்ளிகள் இயங்கி கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிலும் தனியார் பள்ளிகள் நகரை விட்டு சற்று தொலைவில் அமைந்திருப்பதால் பள்ளி வேன், பஸ் போன்ற வாகனங்கள் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டு வருகின்றனர்.

ஆனால் பள்ளி பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் இதுவரை பள்ளி மாணவர்கள் பலர் பள்ளி பேருந்துகளின் மூலம் ஏற்பட்ட விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்.

regulations,school bus ,விதிமுறைகள் ,பள்ளி பேருந்து

இதனால் தமிழக அரசு முன்னதாகவே பள்ளி பேருந்துகள் எவ்வாறு இருக்க வேண்டும் என விதிமுறைகளை வெளியிட்டு அவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் மூலம் ஆண்டு தோறும் பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில் தமிழக அரசு தற்போது பள்ளி பேருந்துகளின் முன் மற்றும் பின் பக்கங்களில் கேமராவும், பின் பக்கத்தில் சென்சார் கருவியும் கட்டாயமாக பொறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான சட்டதை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளது.

Tags :