Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொறியியல் பணிகள் காரணமாக சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் ரத்து

By: vaithegi Tue, 02 Aug 2022 7:36:01 PM

பொறியியல் பணிகள் காரணமாக சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் ரத்து

இந்தியா: ஒவ்வொரு நாளும் இந்திய ரயில்வேயால் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன, திருப்பி விடப்படுகின்றன அல்லது நேரம் மாற்றப்படுகின்றன. இதற்கு கனமழை, வெள்ளம் மற்றும் பராமரிப்பு பணிகள் போன்ற பல காரணங்கள் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பயணத்திற்காக புறப்படுவதற்கு முன்னர் உங்கள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதா அல்லது திருப்பி விடப்பட்டதா அல்லது மாற்றியமைக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நாளும் இந்த தகவல் இந்திய ரயில்வே துறையால் வெளியிடப்படுகிறது.

இதை அதிகாரப்பூர்வ இணையதளமான -https://enquiry.indianrail.gov.in/mntes அல்லது NTES ஆப் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்பட்டியல் இந்திய இரயில்வேயால் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற சூழ்நிலையில் ரத்து செய்யப்பட்ட, திருப்பி விடப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். எனவே உடனடியான தகவல்களுக்கு இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட வேண்டியது என்பது மிகவும் அவசியமான ஒன்று .

express trains,engineering ,எக்ஸ்பிரஸ் ரயில்கள்,பொறியியல் பணி

அந்தவகையில் வருகிற ஆகஸ்ட் 6 முதல் 8ம் தேதி வரை மகாராஷ்டிரா வழியாக செல்லும் சில ரயில்கள், புனே எக்ஸ்பிரஸ், ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை குறிப்பிட்ட நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளன. மறுபுறம் புனேவில் இருந்து ஆகஸ்ட் 7 – 9ம் தேதி இடைவெளியில் புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது குறித்த முழு விபரம் மேலே வழங்கப்பட்டுள்ளன இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

Tags :