Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் ரயில் பாதையில் சில மேம்பாட்டு பணி காரணமாக சில முக்கிய ரயில்கள் ரத்து

கோவையில் ரயில் பாதையில் சில மேம்பாட்டு பணி காரணமாக சில முக்கிய ரயில்கள் ரத்து

By: vaithegi Wed, 10 May 2023 12:54:14 PM

கோவையில் ரயில் பாதையில் சில மேம்பாட்டு பணி காரணமாக  சில முக்கிய ரயில்கள் ரத்து

சென்னை : கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிகளில் ரயில் பாதையில் சில மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது குறித்தான முக்கிய அறிவிப்பை தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அதாவது, கோவையிலிருந்து கேரளா பாலக்காடு செல்லும் ரயில் மே 11, 12, 13, 15, 16, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து கேரளாவின் சோரனூரில் இருந்து காலை 8:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை முதல் மே 17-ம் தேதி வரைக்கும் பாலக்காடு டவுன் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

development work,trains ,மேம்பாட்டு பணி,ரயில்கள்

இதனை அடுத்து கோவையிலிருந்து சோரனூருக்கு மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை முதல் வருகிற மே 17-ம் தேதி வரை பாலக்காடு டவுனில் இருந்து மாலை 5:55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மங்களூர் சென்ட்ரலில் இருந்து கோவைக்கு காலை 9 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில் நாளை முதல் மே 17ஆம் தேதி வரைக்கும் பாலக்காடு வரை இயக்கப்படும் எனவும், பாலக்காடு டவுனில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் சிறப்பு ரயில் நாளை மறுநாள் முதல் மே 17-ம் தேதி வரை கோவையிலிருந்து மாலை 4:28 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் நாளை முதல் மே 17-ம் தேதி வரைக்கும் போத்தனூர் வரை இயங்கும் எனவும், சோரனூரில் இருந்து கோவைக்கு புறப்படும் ரயில் நாளை மே 11, 13, 15, 16, 17 ஆகிய தேதிகளில் பாலக்காடு வரை இயங்கும் எனவும், மங்களூர் சென்ட்ரலிருந்து கோவைக்கு செல்லும் ரயில் நாளை முதல் மே 17-ம் தேதி வரை பாலக்காடு வரை இயங்கும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.


Tags :