Advertisement

பொறியியல் பராமரிப்பு பணி ... சில ரயில்கள் ரத்து

By: vaithegi Wed, 03 Aug 2022 4:41:56 PM

பொறியியல் பராமரிப்பு பணி ... சில ரயில்கள் ரத்து

இந்தியா: நாடு முழுவதும் மக்கள் பலர் ரயில் பயணங்களை அதிகம் விரும்புகின்றனர். எனவே ரயில் விபத்துகளை தவிர்க்க அடிக்கடி ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயங்கி வருகின்றன. மேலும் தொலைதூர பயணங்களுக்கு ரயில்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படுகின்றன.

அதினப்படி கோவையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

trains,maintenance work ,ரயில்கள் , பராமரிப்பு பணி

இது பற்றி சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் மாவட்டம், பிக்வான் – வாஷிம்பே ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

மேலும் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி கோவை – ராஜ்கோட் வாராந்திர விரைவு ரயில் (எண்: 16614) ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராஜ்கோட்- கோவை வாராந்திர விரைவு ரயில் (எண்: 16613), கோவை சேலம் வழித்தடத்தில் ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இயக்கப்படும் எனவும், கன்னியாகுமரி – புனே விரைவு ரயில் (எண்: 16382) ஆகஸ்ட் 7 மற்றும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிகளில் இயக்கப்படும் எனவும், கன்னியாகுமரி – புனே விரைவு ரயில் (எண் : 16381 ) ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|