Advertisement

தண்டவாள சீரமைப்பு பணி .... சில ரயில்கள் ரத்து

By: vaithegi Mon, 12 Sept 2022 3:11:06 PM

தண்டவாள சீரமைப்பு பணி .... சில ரயில்கள் ரத்து

சேலம் : சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோயம்பத்தூர் போத்தனூர் மார்க்கத்தில் தண்டவாள சீரமைப்பு பணி இன்று (செப். 12) நடைபெற இருக்கிறது. இந்த பராமரிப்பு பணியானது அக்டோபர் 18 ஆம் தேதி வரை 37 நாட்களுக்கு நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் இயங்கும் குறிப்பிட்ட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

எனவே அதன் படி பிலாஸ்பூர்- எர்ணாகுளம் வாராந்திர ரயில் (22815) இன்று முதல் செப்டம்பர் 19, 26 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் கோவைக்கு செல்லாமல் மாற்றுப் பாதையாக இருகூர்-போத்தனூர் மார்க்கத்தில் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

trains,track maintenance work ,ரயில்கள் , தண்டவாள சீரமைப்பு பணி

மேலும் திருநெல்வேலி-தாதர் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22630) செப். 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளிலும், பிலாஸ்பூர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் (22619) செப். 13, 20, 27, அக்டோபர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் கோவைக்கு செல்லாமல் இருகூர் -போத்தனூர் வழியே இயக்கப்படுகிறது.

பாட்னா-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22670) செப் 13,20 ,17, அக்டோபர் 4, 11, 18 தேதிகளிலும், செகந்தி ராபாத்-எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07189) செப் 16, 23, 30, அக்டோபர் 7, 14 தேதிகளில் கோவைக்கு பதிலாக மாற்றுப்பாதையாக இருகூர்-போத்தனூர் வழியே செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ரயில்களும் கோவை ரயில் நிலையத்திற்கு போத்தனூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|