Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப். 16) முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து

நாளை (செப். 16) முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து

By: vaithegi Thu, 15 Sept 2022 12:45:46 PM

நாளை (செப். 16) முதல் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து

சென்னை: ரயில்வே நிலையங்களுக்கு இடையே மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயில் நாளை (செப். 16) முதல் செப் 30 வரை ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும் எனவும் மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

trains,maintenance work ,ரயில்கள் ,பராமரிப்பு பணி

இதனை அடுத்து திருச்சி-மானாமதுரை பயணிகள் ரயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற செப். 17 ஆம் தேதி முதல் செப் 22 ஆம் தேதிக்குள் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (செப். 16) முதல் செப் 30 வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரயிலாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி காரணமாக மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரயில் போன்றவை நாளை செப் 16 முதல் செப் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|