Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சில பணி .. நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் சில முக்கிய ரயில்களின் வழித்தடம் , நேரம் மாற்றம்

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் சில பணி .. நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் சில முக்கிய ரயில்களின் வழித்தடம் , நேரம் மாற்றம்

By: vaithegi Fri, 26 Aug 2022 12:01:05 PM

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில்  சில பணி ..  நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் சில முக்கிய ரயில்களின்  வழித்தடம் , நேரம் மாற்றம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பொறியியல் மேம்பாடு மற்றும் மின் இணைப்பு மாற்றம் செய்யும் பணி நாளை முதல் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. இதனால், திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் வழித்தடம் மற்றும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை, ஆகஸ்ட் 28, 29, ஆகிய 3 நாட்களும் மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (22638) ரயில் சென்னை செல்லாமல் சேலம் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று சேலத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு மங்களூரு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களும் ஆலப்புழாவில் இருந்து கிளம்பி தன்பாத் ரயில் (13352) காலை 6:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tirupattur railway station,route,time change ,திருப்பத்தூர் ரயில் நிலையம்,வழித்தடம் , நேரம் மாற்றம்

மேலும், ஆகஸ்ட் 28, 30 ஆம் தேதிகளில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு செல்லும் உதய் டபுள்டெக்கர் எக்ஸ்பிரஸ் (22665) ரயில் மதியம் 2:15 மணிக்கு கிளம்புவதற்கு பதிலாக மாலை 3:15 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து டாடாநகர் செல்லும் எக்ஸ்பிரஸ் (18190) ரயில் காலை 7:15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 8:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி பிலாஸ்பூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயில் காட்பாடி, சேலம் வழியாக செல்லாமல் விழுப்புரம், விருத்தாச்சலம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே ரயில் காலை 8:30 மணிக்கு பதிலாக காலை 11:15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|